இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கிடப்பில் போட்டுள்ளது ஆஸ்திரேலியா!!

X
Passport
இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை ஆஸ்திரேலியா கிடப்பில் போட்டுள்ளது. மாணவர் விசா மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவதை தடுக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பஞ்சாப், அரியானா, உ.பி., உத்தராகண்ட், குஜராத், காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக விசா கோரி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே மாணவர் விசாவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறியதால் அமெரிக்காவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து மாணவர் விசா வழங்குவதில் ஆஸ்திரேலியாவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
Next Story
