தவெக மாநாடு; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

X
school leave
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் நாளை (ஆக. 21ம் தேதி) நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்காக அங்கு 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 5 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டு மேடை மற்றும் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், மின் விளக்குகள், பந்தல் அமைப்பது, அலங்கார வளைவுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தவெக மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
Next Story
