புதிய உச்சம்.. பத்தாயிரத்தை தாண்டிய தங்கம் விலை!!

புதிய உச்சம்.. பத்தாயிரத்தை தாண்டிய தங்கம் விலை!!
X

gold

இதுவரை இல்லாத வகையில், வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Story