ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு: உச்சநீதிமன்றம்

X
supreme court
செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிரந்தர செவிலியருக்கு இணையாக ஒப்பந்த செவிலியருக்கு ஊதியம் தர உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் அமர்வு விசாரித்தது. ஒன்றிய அரசிடம் உரிய நிதி கிடைக்காததால் ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பிரச்சனை குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story
