சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!!

X
vijay
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெறவுள்ள விசாரணையில் ஆஜராக தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் விஜய்க்கு, டெல்லி விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் இடங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என டெல்லி காவல் துறை உறுதியளித்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் விஜய் ஆஜராகிறார்.
Next Story
