தமிழ்நாட்டில் 11 நாய் இனங்களுக்கு தடை!!

தமிழ்நாட்டில் 11 நாய் இனங்களுக்கு தடை!!

rottweiler

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, நாய் இனப்பெருக்க கொள்கை -2024 வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் உடல் ஆராக்கிய பிரச்சினைகளை தாங்க முடியாத செட் ஹவுண்ட், பிரெஞ்சு புல்டாக், அலாஸ்கன் மலாமுட், செளசௌ, கீஷோண்ட், நியூபவுண்டிலாட், நார்வே எல்கவுண்ட், திபெத்திய மாஸ்டிப், சைபீரியன் ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட், பக் ஆகிய 11 நாய் இனங்கள் வளர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும் என்றும் நாய் இனப்பெருக்க கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story