வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன்.14 தீர்ப்பு!!

senthil balaji IT raid

senthil balaji IT raid

சட்டவிரோத பணப்பரிமாற்ற காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்களின் மீது ஜூன் 14ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Read MoreRead Less
Next Story