மழை நின்றதால் கணிசமாக குறைந்த காய்கறி விலை; ரூ.150க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.80க்கு விற்பனை!!

மழை நின்றதால் கணிசமாக குறைந்த காய்கறி விலை; ரூ.150க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.80க்கு விற்பனை!!

Koyambedu Market

சென்னையில் மழை ஓய்ந்ததால் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன்படி நேற்று ரூ.150க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் கிலோ ரூ.60க்கும், உருளைக்கிழங்கு ரூ.45க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், ஊட்டி கேரட் ரூ.50க்கும், கர்நாடக கேரட் ரூ.30க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160க்கும், கர்நாடக பீட்ரூட் ரூ.30க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.65க்கும், வெண்டைக்காய் ரூ.40க்கும், கத்திரிக்காய் ரூ.30க்கும், பாகற்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முருங்கைக்காய் கிலோ ரூ.60க்கும், பட்டாணி ரூ.250க்கும், இஞ்சி ரூ.170க்கும், பூண்டு ரூ.350க்கும், அவரைக்காய் ரூ.80க்கும், தேங்காய் ரூ.50க்கும் விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story