பேருந்துகளில் விளம்பரங்களை அகற்றக் கோரி வழக்கு: 2 வாரத்துக்கு ஒத்திவைத்த ஐகோர்ட்!!

பேருந்துகளில் விளம்பரங்களை அகற்றக் கோரி வழக்கு: 2 வாரத்துக்கு ஒத்திவைத்த ஐகோர்ட்!!
X
highcourt


அரசு பேருந்து கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற கோரி ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களால் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், பேருந்து கண்ணாடிகளில் விளம்பரங்கள் ஒட்டப்படுவதை தவிர்க்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Next Story