இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

X
மா சுப்ரமணியன்
தமிழக சட்டசபையில் இன்று சென்னை திரு.வி.க. நகர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. தாயகம் ரவி பேசும் போது, நகர்ப்புறநலவாழ்வு மையம் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இவற்றில் 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 208 மையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார் என்று அவர் கூறினார்.
Next Story