திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு

Tirupati 

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய்த்துறை மந்திரி அங்கனி சத்ய பிரசாத் தெரிவித்தார். மேலும் அவர், வைகுண்ட ஏகாதசியின் தொடக்கத்தில் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவசர நடவடிக்கை சம்பவத்திற்கு காரணமா? ஒருங்கிணைப்பு இல்லாததா என்பது விசாரணையில் தெரியவரும். இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி சடங்கிற்கு பங்களிக்க அந்தந்த கலெக்டர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story