தொகுதி மறுவரையறை - 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்: கனிமொழி

X
Kanimozhi
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒத்தக்கருத்தை முன்வைத்துள்ளனர். கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது. கூட்டு நடவடிக்கை குழுவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.
Next Story
