ஒரே மாதத்தில் 3வது முறை; குஜராத்தில் லேசான நிலநடுக்கம்!!

ஒரே மாதத்தில் 3வது முறை; குஜராத்தில் லேசான நிலநடுக்கம்!!

நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக நில அதிர்வுக்கான ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 10.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. கட்ச் மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்படுவது இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறை ஆகும். முன்னதாக கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி இருந்தது. இம்மாதம் 7 ஆம் தேதி ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டரில் 3.2 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

Next Story