நல ஓய்வூதிய மோசடி: அரசு ஊழியர்கள் 38 பேர் சஸ்பெண்ட்!!
பைல் படம்
கேரள மாநிலத்தில் மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு சார்பில் நல ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல ஓய்வூதியத்தை அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் 1,458 பேர் மோசடி செய்து பெற்று வந்தது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து மோசடி பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நல ஓய்வூதிய மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 38 பேரை 'சஸ்பெண்டு' செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story