தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

X
CMD
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று( செப்.10 ) முதல் 15ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
