வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்

Cyclone

சென்னையில் அதிகாலை பரவலாக மழை பெய்த நிலையில், வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது. இதனால் தமிழகத்தில் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, 7ம்தேதி முதல் 11ம் தேதி வரையிலான நாட்களில், புயல் சின்னமாக வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கலாம். தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்வுக்கு, 40 சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story