மக்களுக்கு ஷாக்! ஒரு சவரன் ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது!!

மக்களுக்கு ஷாக்! ஒரு சவரன் ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது!!
X

gold

9 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9,795-க்கும், ஒரு சவரன் ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.9,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இதே வேகத்தில் சென்றால் இன்னும் சில நாட்களில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story