காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்; அவருக்கு வயது 93!!

X
Kumari Ananthan
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவரும், பாஜக தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(93) வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். குமரி அனந்தன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
