ராம பக்தர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஓட்டு போடக்கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

X
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “ராம பக்தர்களின் ஒரு ஓட்டு கூட ராமரை அவமதித்த I.N.D.I.A. கூட்டணிக்கு விழக்கூடாது. ஆணவக்கொலைக்கு சனாதனம் மற்றும் ராமர் தான் காரணம் என வன்னி அரசு பேசியது கண்டிக்கத்தக்கது. சம தர்மம், சமூக நீதி காத்தவர் ராமர், அவர்களை ராமாயணம் படிக்க சொல்லுங்கள். வன்னி அரசுக்கு கம்ப ராமாயணத்தை வழங்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் ஆணவக்கொலையை தடுக்க சட்டம் கொண்டுவராதது ஏன்? திமுக அரசின் அஜாக்கிரதைதான் ஆணவக்கொலைகள் நடக்க காரணம்” எனக் குற்றஞ்சாட்டினார்.
Next Story
