ஏன் டெல்லி சென்றீர்கள்?: அதிமுக MLA-க்களின் கேள்விக்கு பதில் கூறாமல் சென்ற செங்கோட்டையன்

Sengottaiyan
தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனிடையே, சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம் தொடர்பாக கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏன் டெல்லி சென்றீர்கள் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கேட்டதாகவும் அதற்கு செங்கோட்டையன் பதில் எதுவும் கூறாமல் சென்றதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் சபாநாயகர் அறையில் செங்கோட்டையன் அமர்ந்தது சர்ச்சையான நிலையில் தற்போது சபாநாயர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கு சபைக்கு வருகிறார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையிலேயே செங்கோட்டையன் இருப்பதாக கூறப்படுகிறது.