போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் NCB-ல் இருந்து மாற்றம்!!
Gyaneshwar Singh
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் NCB-ல் இருந்து மாற்றம் செய்துள்ளனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த போதைப்பொருட்களை கையாள்வதில் பல விதிமீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஞானேஸ்வர் சிங் மீது புகார் எழுந்தது. ஞானேஸ்வர் சிங்குக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அடுத்தடுத்து புகார் எழுந்ததால் ஞானேஸ்வர் சிங்குக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆணையிடப்பட்டது.
Next Story