12 மணி நேரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது: அமைச்சர் சேகர்பாபு
Sekarbabu
அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 12 மணி நேரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். புயல் மழை என்றவுடன் முதலமைச்சர் உடனடியாக களத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணி நடைபெற்று வருகிறது. மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் வஞ்சக சூழ்ச்சியுடன் அரசியல் செய்கின்றன என்றும் தெரிவித்தார்.
Next Story