இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர்!!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர்!!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மார்ச் 6-ல் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். 19 மீனவர்களையும் நடுக்கடலில் இலங்கை கடற்படை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்திய – இலங்கை தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

Read MoreRead Less
Next Story