அகிலேஷ் வழிபாடு செய்த கோயிலை கங்கை நீரால் கழுவிய பா.ஜவினர்: சமாஜ்வாடி கண்டனம்

அகிலேஷ் வழிபாடு செய்த கோயிலை கங்கை நீரால் கழுவிய பா.ஜவினர்: சமாஜ்வாடி கண்டனம்

Agilesh

அகிலேஷ் யாதவ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின்னர், கோயிலை கங்கை நீரால் பாஜவினர் கழுவிய சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உபி முன்னாள் முதல்வரும், கன்னோஜ் தொகுதியின் சமாஜ்வாதி வேட்பாளருமான அகிலேஷ் யாதவ், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன், சித்தபீத் பாபா கவுரி சங்கர் மகாதேவ் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அவர் பூஜைகளை முடித்துவிட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் அங்கிருந்த பாஜவினர், கோயில் வளாகத்தை கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story