புர்காவை விலக்கி முகத்தை காட்டும்படி கூறியதால் ஐதராபாத் பாஜ வேட்பாளர் மாதவி லதா மீது வழக்கு
Bjps
தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐதராபாத் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் மாதவி லதா தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்த இஸ்லாமிய பெண்ணிடம் அவரது புர்காவை விலக்கி முகத்தை காட்டும்படி கூறி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்தார். மேலும் போலீசாரிடம் முழுமையாக சோதனை செய்த பின்னரே வாக்காளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
Next Story