சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்

Death threat to CV Shanmugam
X

Death threat to CV Shanmugam

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் வசித்து வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இவருக்கு நேற்று முன்தினம் இரவு செல்போனில், அறிமுகமில்லாத எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தரக்குறைவாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து சி.வி.சண்முகம் உதவியாளர் ராஜாராம், ரோஷனை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி மற்றும் போலீசார், செல்போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story