பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Dhoni

மே 18 முதல் மே 21ம்தேதி வரை கர்நாடகா மாநிலத்தின் தென் பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை நடைபெற உள்ள சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நாளை மீண்டும் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினாலோ அல்லது 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றாலோ ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே சிஎஸ்கே அணிக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதே நேரத்தில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

Next Story