சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி நாய் வளர்ப்போருக்கு கட்டுப்பாடுகள்: சங்கிலி, முககவசம் அணிவித்து வெளியே அழைத்துச்செல்ல வேண்டும்; 23 வகை நாய்களுக்கு உடனடி கருத்தடை; தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி நாய் வளர்ப்போருக்கு கட்டுப்பாடுகள்: சங்கிலி, முககவசம் அணிவித்து வெளியே அழைத்துச்செல்ல வேண்டும்; 23 வகை நாய்களுக்கு உடனடி கருத்தடை; தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

Dog

சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலியாக, நாய் வளர்ப்போருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாய்களுக்கு சங்கிலி, முகக் கவசம் அணிவித்து வெளியே அழைத்து செல்ல வேண்டும். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு உடனடி கருத்தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பூங்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ராட்வீலர் வகையை சேர்ந்த இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.இச்சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாய்கள் கடித்ததில் அந்த சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து கடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நாய்கள் மீது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு

Read MoreRead Less
Next Story