பாலியல் புகாரில் சிக்கியதால் ஆளுநர் மாளிகைக்குள் இனி நான் போகவே மாட்டேன்: மே.வங்க முதல்வர் மம்தா அதிரடி
Mamta
மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக புகார் எழுந்த பிறகும் கூட ராஜினாமா செய்யாததால், ஆளுநர் மாளிகைக்குள் இனிமேல் நான் போக மாட்டேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ராஜ்பவனில் பெண் ஒப்பந்த ஊழியரை ஆளுநர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் எழுப்பி உள்ளார். இந்த குற்றச்சாட்டை ஆளுநர் மறுத்து வருகிறார். இந்நிலையில் சப்தகிராமில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஆளுநர் ஆனந்த போஸ் தேவைக்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தினால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார்.
Next Story