மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல வனத்துறை தடை விதிப்பு!
Mega
மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்று முதல் 3 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேகமலை அருவிக்கு செல்ல 3 நாட்களுக்கு வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மேகமலை அருவிக்கு தினமும் தேனி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேகமலை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.மேலும் நாளை தேனி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Next Story