ராகுலுக்கு அதானி, அம்பானி டெம்போவில் கறுப்புபணம்: மோடி

ராகுலுக்கு அதானி, அம்பானி டெம்போவில் கறுப்புபணம்: மோடி

Modi

தொழிலதிபர்கள் அதானி, அம்பானியை விமர்சிப்பதை ராகுல்காந்தி திடீரென நிறுத்தி விட்டது ஏன் என்றும் டெம்போக்கள் நிறைய கறுப்பு பணத்தை அவர்களிடம் இருந்து வாங்கி விட்டாரா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தெலங்கானாவில் உள்ள வேமுலாவாடாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘ காங்கிரசின் இளவரசர்(ராகுல் காந்தி) கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கும் அதானி- அம்பானிக்கும் ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதா என்பது உள்பட பல விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பி கொண்டிருந்தார். ஆனால், திடீரென அதானி மற்றும் அம்பானியை விமர்சிப்பதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டது ஏன்.தெலங்கானா மண்ணில் இருந்து இந்த கேள்வியை எழுப்புகிறேன். 2 தொழிலதிபர்களிடம் இருந்தும் ராகுல் காந்தி எவ்வளவு பணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன். அதானி, அம்பானியிடம் இருந்து டெம்போக்கள் நிறைய கறுப்பு பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்து விட்டதா. அவர்களுக்கு இடையில் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 5 வருடங்களாக என்னை விமர்சித்து வந்தீர்கள். திடீரென அவர்களை தாக்குவதை நிறுத்தியது எதனால்?. எத்தனை கட்டுக்கள் கறுப்பு பணம் வாங்கினீர்கள். இது பற்றி நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார். கறுப்பு பணத்தை ஒழித்து விட்டதாக கூறிவிட்டு, தற்போது அதானி, அம்பானியிடம் கறுப்பு பணம் இருப்பதாக பிரதமர் மோடியே கூறியிருப்பது குறித்து

Next Story