போர் புரிய வேண்டிய அவசியமில்லை ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாமாக இந்தியாவுடன் இணைந்திடும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

போர் புரிய வேண்டிய அவசியமில்லை ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாமாக இந்தியாவுடன் இணைந்திடும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

Rajnath

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க போர் புரிய வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரின் வளர்ச்சியை பார்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள். அது இந்தியாவுடன் இணைக்கப்படும்’ என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் தற்போது சூழல் கணிசமாக மேம்பட்டுள்ளது.அங்கு ஆயுதப்படை சிறப்பு சட்டம் தேவைப்படாத காலம் விரைவில் வரும். அது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் முடிவெடுக்கும். காஷ்மீரிலும் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அதே போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான உரிமைகோரலை இந்தியா ஒருபோதும் கைவிடாது. நாம் போர் புரிந்து அப்பகுதியை வலுக்கட்டாயமாக மீட்க வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரின் வளர்ச்சியையும் அமைதியையும் பார்க்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாகவே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்.

Next Story