தமிழக அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை : போக்குவரத்துத் துறை விளக்கம்
Police
ழக அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நெல்லை நாங்குநேரி அருகே, டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போக்குவரத்து துறை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற காவலர் ஆறுமுகப்பாண்டி, காவலர் சீருடையில் இருப்பதால் பயணச் சீட்டு எடுக்க முடியாது என்று கூறி போக்குவரத்துத் துறை ஊழியர்களான ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Next Story