ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி

ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி

Ragul 

உபியில் தனது பேச்சு தொடர்பான போலி வீடியோ குறித்த உண்மைகளை டிவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, ‘ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பிரதமராக மோடி இருக்க மாட்டார்’ என கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 10ம் தேதி உபியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ஜூன் 4ம் தேதிக்குப்பிறகு மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்றும், உபியில் இந்தியா கூட்டணிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என ராகுலே கூறுவது போல எடிட் செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் ராகுல் பேசிய உண்மையான வீடியோவை காங்கிரஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

Read MoreRead Less
Next Story