அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு
Rev
அசாமில் வெள்ள பாதிப்பினால் 11 மாவட்டங்களில் 3.5லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ரெமல் சூறாவளிக்கு பின் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கச்சார் மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 மாவடங்களில் சுமார் 3.5லட்சம் மக்ள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கச்சார் மாவட்டத்தில் மட்டும் 1,19,997 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகோனில் 78,756 மற்றும் ஹோஜாயில் 77030 மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 52,684 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 28ம் தேதி முதல் மழை, வெள்ளம், புயலால் ஏற்பட்ட சம்பவங்களில் 12 பேர் பலியாகி உள்ளனர்.