தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு பாரபட்சம்: ராமதாசுக்கு கோபம் வந்துடுச்சு…
ramdoss
பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்றால் பணியை முடக்கி போடாமல் போதிய நிதி ஒதுக்கி குறிப்பிட்ட காலத்தில் அப்பணிகள் முடிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையான அவசியமான, அத்தியாவசியமான வேலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. உரிய நிதி ஒதுக்க வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். பட்ஜெட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளது. வரி நாம் கூடுதலாக கொடுத்திருக்கிறோம். வரி குறைவாக செலுத்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படியான பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story