அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு

SchoolSchools 

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறினார். தமிழக அரசின் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த ‘தமிழ் புதல்வன்’ எனும் மாபெரும் திட்டம் வரும் கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது.இத்தகைய முன்னோடி திட்டங்களின் மூலம் கல்வி பயிலும் மாணவர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்கால தூண்களாகத் திகழ்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் 12ம் வகுப்பு பயின்ற மாணவ – மாணவிகளுக்கான கல்லூரி கனவு-2024 மாவட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Next Story