4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி அம்மா உணவகத்தில் ஒருநாளாவது ஆய்வு செய்தாரா? அமைச்சர் சேகர்பாபு கேள்வி
sekar
அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் பகுதி மக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கவும், துணை பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ஆக்கிரமிப்பில் இருந்த 1 ஏக்கர் இடம் மீட்கப்பட்டு அங்கு பணிகள் நடைபெறுகிறது. எதிர்கட்சி துணை தலைவருக்கு எங்கு என்ன பணி நடைபெறுகிறது என்று தெரியாது. ஏன் என்றால் ஆர்.பி.உதயகுமாருக்கு சென்னையை பற்றி தெரியாது. கொரோனா காலத்தில் இவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்.
Next Story