சிவகங்கை கப்பல் நாகை வந்தது; இலங்கைக்கு 13ம் தேதி முதல் போக்குவரத்து.! நாளை சோதனை ஓட்டம்
Ship
சிவகங்கை கப்பல் இன்று நாகை வந்தது. நாளை இலங்கைக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது. நாளை மறுதினம் முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்குகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி துவங்கப்பட்டது. செரியபாணி என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பலில் கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்பட்டது.
Next Story