14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு

silai

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவில்தேவராயன்பேட்டை கிராமத்தில் மச்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் ஆபிசர்நகர் பகுதியை சேர்ந்த முகமதுபைசல் (43) என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். நேற்று காலை வீடு கட்டுவதற்காக 3 அடிக்கு 2 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் மூன்றாவது குழி தோண்டும்போது முதலில் பண்டைய கால ஒரு ஐம்பொன் சிலை கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மேலும் பள்ளம் தோண்டும்போது அடுத்தடுத்து சுவாமி சிலைகள் கிடைத்தது.

Next Story