பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!!
Vadalur
வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பழங்கால கட்டடங்கள் உள்ளதா? என ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் மாநில தொல்லியல்துறையின் ஆலோசகர் தயாளன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை தலைவர் டாக்டர் செல்வகுமார் அடங்கிய 3 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்கிறது. இவர்களுடன் அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அறநிலையத்துறை பொறியாளர்கள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.சத்திய ஞான சபை முன்பு பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குழுவினர் ஆய்வைத் தொடங்கினர். பள்ளத்தில் உள்ள தொன்மையான கட்டிடங்கள் எந்த காலத்தை சேர்ந்தது என ஆய்வு செய்யப்படுகிறது. நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொல்லியல்துறையின் ஆய்வு ஓரிரு நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த ஆய்வுக்கு பிறகு மீண்டும் கட்டுமான பணிகள் துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.