வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

India

வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தனர். இதில், காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, எந்தவித விதிமீறல்களும் இருக்கக் கூடாது. தேர்தல்ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.

Next Story