குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு

குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு

Votee

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தனர்புதுடெல்லி: கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 93 தொகுதிகளில் 3ம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 63.13 சதவீத வாக்குகள் பதிவாகின. அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

Read MoreRead Less
Next Story