2025 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி பங்கேற்பாரா ?
எம்.எஸ். டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக இருப்பவர் எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வருகிறவர். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.கடந்த ஐ.பி.எல். தொடர்தான் எம்.எஸ். டோனியின் கடைசி தொடராக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் எம்.எஸ். டோனி மீண்டும் விளையாடுவார் என சி.எஸ்.கே. நிர்வாகம் நம்பிக்கை கொடுத்தது. ஆனால் டோனி எந்த தகவலும் வெளியீடவில்லை.
2025 ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற இருகின்ற நிலையில் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட வீரர்களை தக்கவைத்து கொள்ளாலாம். இதனால் சி.எஸ்.கே. டோனியை ரிலீஸ் செய்துவிட்டு, uncapped வீரர் என்ற வகையில் 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்து கொள்ள முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக டோனியிடம் பேச சி.எஸ்.கே. நிர்வாகம் விரும்பிய நிலையில் தன்னால் 28-ந்தேதி வரை ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொள்ள முடியாது என எம்.எஸ். டோனி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தக்க வைத்துக் கொள்ளும் வீரர்ககளின் பட்டியலை வருகிற 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு அணியும், ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் டோனி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆலோசனை கூட்டம் நடத்த சி.எஸ்.கே. நிர்வாகம் நினைத்தது.
சி.எஸ்.கே. நிர்வாகம் 31-ந்தேதிக்கு முன் 29 அல்லது 30-ந்தேதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது. சி.எஸ்.கே. அணியின் சிஇஓ விஸ்வநாதன் கூறுகையில், "எம்.எஸ். டோனியிடம் இருந்து நாங்கள் எந்த தகவலையும் பெறவில்லை. இருந்தாலும் கூட சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். 31-ந்தேதிக்கு முன்பாக அவர் உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.