ஆசிய கோப்பை : ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி - மலேஷியாவை வென்ற இந்தியா !!
Asia Cup
ஆசிய கோப்பை : ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் மலேஷியாவை இந்திய அணி 5-0 கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பைக்காக ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டிகள் மஸ்கட்டில் நடந்து வருகின்றன. கடந்த வாரம் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஏ பிரிவு போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா வென்று சாதனை படைத்தது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மலேஷியாவுடன் மோதியது.
துவக்கத்தில் இந்திய வீராங்கனைகள் மந்தமாக ஆடினாலும் போகப்போக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத் துவங்கினர். போட்டி முடிவில் 5-0 கோல் கணக்கில் மலேஷியாவை அபாரமாக இந்தியா வென்றது.
இந்திய வீராங்கனை தீபிகா ஆட்டத்தின் 37, 39, 48வது நிமிடங்களில் 3 கோல்களை அடித்து அசத்தினார். தவிர, 32வது நிமிடத்தில் வைஷ்ணவி பால்கே, 38வது நிமிடத்தில் கனிகா சிவாச் தலா ஒரு கோல் அடித்தனர்.
மலேஷியா அணியுடன் கடைசியாக மோாதிய 3 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015ல் நடந்த போட்டியில் 9-1 என்ற கோல் கணக்கிலும், 2023ல் நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கிலும் மலேஷியாவை இந்தியா வென்றுள்ளது.