ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி- ஜப்பானை வீழ்த்தி வெற்றி அடைந்த இந்தியா !!
ஹாக்கி
ஹூலுன்பியர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில், ஜப்பான் அணியுடன் மோதிய இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.
தொடக்க ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதல் 3 நிமிடங்களுக்குள் 2 கோல் (சுக்ஜீத் சிங், அபிஷேக்) கோல் போட்டு மிரள வைத்தனர்.
3வது நிமிடத்தில் அபிஷேக் கோல் அடிக்க இந்தியா 2-0 என முன்னிைலையை அதிகரித்தது. 17வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்திய வீரர் சஞ்ஜெய் கோல் போட்டார். ஜப்பானின் அரிதான கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இடைவேளையின்போது இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையில் இருந்தது.2வது பாதியில் ஜப்பானின் கசுமசா மட்சுமோட்டோ கோலடித்து (41வது நிமிடம்) அந்த அணிக்கு ஆறுதல் அளித்தார்.
முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. இந்திய வீரர் அபிஷேக் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்தியா தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை மலேசியா அணியுடன் மோதுகிறது.