கைப்பந்து லீக் போட்டியில் சென்னை முதல் வெற்றி..

கைப்பந்து லீக் போட்டியில்  சென்னை முதல் வெற்றி..

கைப்பந்து லீக் போட்டி

கைப்பந்து லீக் போட்டியில் சென்னை பிளிட்ஸ் அணி ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணியை தோற்கடித்தது.

கைப்பந்து லீக் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் 9 அணிகள் பங்கேற்றுள்ள.

லீக் ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ்-ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி 16-14, 15-11, 15-7 என்ற நேர்செட்டில் ஐதராபாத்தை தோற்கடித்தது.

சென்னை அணி வீரர் சமீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்சிடம் தோற்று இருந்த சென்னை அணி பெற்ற முதல் வெற்றி ஆகும்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்-கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் மாலை 6.30 மணிக்கும்

பெங்களூரு டார்படோஸ்-டெல்லி டூபான்ஸ் இரவு 8.30 மணிக்கும் அணிகள் மோதுகின்றன.என்று தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story