ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே முஸ்தஃபீசுர் ரஹ்மான் !

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே முஸ்தஃபீசுர் ரஹ்மான் !

முஸ்தஃபீசுர் ரஹ்மான் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற 22 ஆம் தேதி ஆரம்பமாகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வரும் ஆர் சி பி அணியை எதிர்கொள்கிறது. இதற்கு சிஎஸ்கே வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

சிஎஸ்கே அணியில் வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த கான்வேக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிராணாவுக்கும் காயம் ஏற்பட்டது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முஸ்தஃபீசுர் ரஹ்மான் ஒன்பது ஓவர்களை வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 39 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் முஸ்தஃபிசுர் ரஹ்மான், சி எஸ் கே அணியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

தற்போது அவர் தாம் சிஎஸ்கே போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை புறப்பட்டு செல்வதாகவும் தான் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களுடைய ஆதரவு எனக்கு முக்கியம் என்றும் கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story