டேவிட் வார்னர் கேப்டன்சிக்கான வாழ்நாள் தடை நீக்கம் !!

டேவிட் வார்னர் கேப்டன்சிக்கான வாழ்நாள் தடை நீக்கம் !!

டேவிட் வார்னர் 

கேப்டவுனில் பந்தை சேதப்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் துணைக் கேப்டனாக இருந்த வார்னர், இந்தத் திட்டத்தைத் தூண்டியவர் என அடையாளம் காணப்பட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருட தடையுடன் கேப்டன் பதவி பெற தடை இல்லை என வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.


டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை வாழ்நாள் வரை தடை செய்யப்பட்டதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. அதாவது, இப்போது அவர் பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக தகுதி பெற்றுள்ள நிலையில் இந்த மாத தொடக்கத்தில் வார்னர் தனது வழக்கை மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவிடம் முன்வைத்தார், அதில் 37 வயதான அவர் தடையை உடனடியாக நீக்குவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளார் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழு வெளியிட்டுள்ள பதிவில் வார்னர் 2018 இல் நடந்ததைப் போன்ற எந்த நடத்தையிலும் ஈடுபட மாட்டார் என்பதில் மறுஆய்வுக் குழு திருப்தி அடைந்துள்ளது. இதன் விளைவாக அவர் இனி கேப்டன் பதவி பெற தகுதி பெற்றுள்ளார்”என தெரிவித்துள்ளனர்.


தலைமைத் தடைக்கு எதிராக வார்னர் மேல்முறையீடு செய்திருந்தார், இந்நிலையில், மீண்டும் அவர் செய்த மேல்முறையீட்டில் அவர் மீது விதிக்கப்பட்டு இருந்த கேப்டன்சிக்கான வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story