ரோகித் சர்மாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை - ஹர்திக் பாண்டியா

ரோகித் சர்மாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை - ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா 

மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட பின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இதுவரை பேசவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோகித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் நீக்கி மும்பை அணி எதிர்காலத்தை சிந்தித்து ஹர்திக்கை நியமித்துள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா, ''மும்பை அணி ரசிகர்களின் எமோஷன் எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மும்பை அணியின் கேப்டனாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது பணியாகும். மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட பின், ரோகித் சர்மாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். அவர் மும்பை அணியில் இணைந்த பின் நிச்சயம் அவருடன் ஆலோசிப்பேன்.'' எனக் கூறினார்.


Tags

Read MoreRead Less
Next Story